Articles: தமிழ் (Tamil language)

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தேசிய சுகாதார பராமரிப்பு திட்டம் : அணைத்து சிங்கப்பூரர்களுக்குமான ஒற்றுமொத்த பராமரிப்பு.

20 August 2015

சிங்கப்பூர் ஜனநாயக கட்சியின் சுகாதார பராமரிப்பு திட்டம் அணைவர்க்கும் பொதுவான கருணைமிகுந்த நியாமான திட்டம்.

 

 

மாற்றுப் பொருளியல் கொள்கை - ஒரு பார்வை

01 November 2010

Tan Kin Lianமுன்னாள் தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (NTUC) காப்புறுதிப் பிரிவின் CEO வும் பொருளியல் ஆய்வாளருமான திரு தான் கின் லியன் (Mr Tan Kin Lian) அவர்கள் சி.ஜ.க.-வின் பொருளியல் கொள்கைக்கான பரிந்துரையைப் பாராட்டிப் பேசியிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. அவர் நமது கட்சியின் அறிக்கையை அறிவுப்பூர்வமான அறிக்கை என்று வர்ணித்துள்ளார்.

குறைந்த பட்ச ஊதியம்

16 June 2010

திரு லீ குவான் யூ அவர்கள் குறைந்த பட்ச ஊதியம் வழங்கும் முறை அவ்வளவு பொருத்தமானதன்று என்றும் அதனைச் சட்டமாக்கினால் பலர் வேலை வாய்ப்பை இழப்பர் என்றும் கூறினார். அதோடு இத்தகைய சட்டத்தினால் நமது பொருளியல் வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் கூறினார். இது ஒரு குறுகலான பார்வை என்பதையும் அடிப்படையற்ற பார்வை என்பதையும் நாம் அறிவோம். ஆனால், இக்கருத்துக் குறித்து எந்தவொரு விவாதமும் எழுப்பப்படாதது மிகவும் வருந்தத்தக்க ஒன்று.

சிங்கப்பூர் ஜனநாயக கட்சியின் மே தின வாழ்த்துச் செய்தி 2010

26 May 2010

தொழிலாளரின் சேவையை நினைவு கூறும் நாளான ‘தொழிலாளர் தினம்’ மீண்டும் வந்துவிட்டது. உலகெங்கும் உள்ள தொழிலாளர்கள் பெருமிதம் கொள்ளவேண்டிய இத்தருணத்தில் நாம் பெருமிதம் கொள்ள என்ன இருக்கிறது. சிங்கைத் தொழிலாளர்கள் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை உலகே அறியும்.

சி.ஜ. கட்சியின் வளர்ச்சியும் சாதனைகளும்

03 May 2010

finale2சி.ஜ.கட்சி கடந்த பிப்ரவரி மாதம் 2010-ல் தமது 30 ஆண்டு பயணத்தின் நிறைவை வெற்றிகரமாகக் கொண்டாடியது. இக்கொண்டாட்டத்தில் கட்சி உறுப்பினர்களும் நண்பர்களும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டதோடு பல வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நமது கட்சி சின்னத்திற்கு அங்கீகாரம்

06 March 2010

SDP logoதேசிய நூலகத்தில் நடைபெற்ற 100 ICONS கண்காட்சியில் வைக்கப்பட்ட மூன்று அரசியல் கட்சி சின்னங்களுள் நமது சிங்கப்பூர் ஜனநாயக்கட்சியின் சின்னமும் ஒன்று என்பதை அறிந்து கட்சி பெருமிதம் கொள்கிறது. இக்கண்காட்சி சிங்கப்பூர் வடிவமைப்புக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.