சி.ஜ. கட்சியின் வளர்ச்சியும் சாதனைகளும்

finale2சி.ஜ.கட்சி கடந்த பிப்ரவரி மாதம் 2010-ல் தமது 30 ஆண்டு பயணத்தின் நிறைவை வெற்றிகரமாகக் கொண்டாடியது. இக்கொண்டாட்டத்தில் கட்சி உறுப்பினர்களும் நண்பர்களும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டதோடு பல வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

சி.ஜ.கட்சி கடந்த 1980ம் ஆண்டு துவக்கப்பட்டதிலிருந்து படிப்படியாக வளர்ச்சி பெற்று வந்துள்ளது என்றும் அது இன்று உறுப்பினர் அளவிலும் செயலாகத்திலும் பன்மடங்கு வளர்ச்சி பெற்றுள்ளது என்று கட்சியின் பொதுச் செயலாளர் Dr. Chee அவர்கள் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பெரும் வளர்ச்சியின் பயனாகக் கட்சி இன்று சிறந்த முறையில் சிங்கப்பூரரின் நலனுக்காக செயல்பட்டு வருகிறது என்றும் கூறினார். இதனால் தான் இன்று சிங்கப்பூரரின் பெரும் பகுதியினர் நமது கட்சியின் இணைய தளத்தைப் பயன்படுத்தி வருவதாகவும் அவர் விளக்கினார். இதர அரசியல் கட்சிகளோடு ஒப்பிடும்போது SDP யின் இணையதளம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளதாகவும் கூறினார்.

இந்த இணையத்தளத்தில் yoursdp.org பலசெய்திகள் நாளும் வெளியிடப்படுகின்றன. படச்சுருள்களும் நமது வாழ்க்கையைப் பாதிக்கும் அரசியல் நிலவரங்களும் இடம்பெற்றுள்ளன.

புதிய ஜனநாயகவாதிகள் என்ற இதழும் கட்சியால் வெளியிடப்படுகின்றன. இவ்விதழ் இன்று பல மாற்றங்களுடன் வெளியிடப்படுகிறது.

இளம் சிங்கப்பூரர்களையும் அரசியலில் ஆர்வம் காட்டச் செய்ய இளம் ஜனநாயகவாதிகள் என்ற பிரிவினை கட்சி அறிமுகப்படுத்தியது. இது எதிர்கட்சிகளின் வரிசையில் ஒரு முதல் முயற்சி என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

கட்சியின் கடந்த கால வளர்ச்சியையும் சேவையையும் நினைவுகூறும் வகையில் ஒரு கண்கவர் நினைவுமலர் அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் சிங்கப்பூர் பற்றியும் நமது கட்சி பற்றியும் பல செய்திகள் இடம் பெற்றுள்ளன.

இத்தனை மாற்றங்களையும் கண்டுள்ள நமது கட்சி தொடர்ந்து சிங்கப்பூரரின் வாழ்க்கையினை மேம்படுத்த பாடுபட புத்துயிர் பெற்று எழுந்துள்ளது. சிங்கப்பூரருக்காகக் குரல் கொடுக்க கட்சி ஒரு போதும் தயங்கியதுமில்லை தயங்கப்போவதுமில்லை. வரும் காலங்களில் தகுதியானவர்களைத் தேர்தலில் நிறுத்தி அவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பவதன்வழி ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக சி.ஜ.கட்சி விளங்கும் என்பதில் ஐயமில்லை. மக்கள் செயல் கட்சிக்கு நல்லதொரு போட்டியாக இருப்பதோடு அவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் ஒரு பொறுப்புள்ள அரசியல் அமைப்பாகவும் சி.ஜ.கட்சி விளங்கும்.

உங்களின் ஆதரவோடு நாங்கள் மேன்மேலும் வளர முடியும்.

தமிழ் (Tamil language) Monday, 03 May 2010 SingaporeDemocrats Print

LEAVE A COMMENT