நமது கட்சி சின்னத்திற்கு அங்கீகாரம்

SDP logoதேசிய நூலகத்தில் நடைபெற்ற 100 ICONS கண்காட்சியில் வைக்கப்பட்ட மூன்று அரசியல் கட்சி சின்னங்களுள் நமது சிங்கப்பூர் ஜனநாயக்கட்சியின் சின்னமும் ஒன்று என்பதை அறிந்து கட்சி பெருமிதம் கொள்கிறது. இக்கண்காட்சி சிங்கப்பூர் வடிவமைப்புக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சிங்கப்பூர் சமூக வரலாற்றைப் பிரதிபலிக்கும் வகையில் நாட்டிலுள்ள பல அமைப்புகளின் சின்னங்களும் குறியீடுகளும் அடையாளச் சின்னங்களும் காட்சி பொருள்களாக வைக்கப்பட்டன. அவற்றுள் மக்கள் கழகம், சிங்கப்பூர் விமானச் சேவை, அரசு நிறுவனங்கள் போன்ற அமைப்புக்களின் சின்னங்களும் அடங்கும்.

இக்கண்காட்சியில் இன்றைய நடைமுறையில் உள்ள 100 அடையாளச்சின்னங்கள் தவிர்த்துக் கடந்த கால அமைப்புகளின் சின்னங்களும் அவற்றைக் குறிக்கும் விளக்கங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றைக் குறித்த விளக்கக் குறிப்புகள் கண்காட்சிக்கு வந்திருந்திருந்தவர்களுக்கும் வழங்கப்பட்டன. இந்த வடிவமைப்பு கழகம் சிங்கப்பூரில் இயங்கி வரும் ஒரு சமூக அமைப்பு. இதன் குறிக்கோள் மக்களிடையே வடிவமைப்புக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே ஆகும்.

SDP and PAP "face off"சிங்கப்பூர் ஜனநாயகக்கட்சியின் அடையாளச் சின்னமானது கடந்த 19.10.1980இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் உள்ள அம்புக் குறி அரசியல் வளர்ச்சியையும் வட்டம் பல இன சமுதாய ஒருமைப்பாட்டையும் சிவப்பு நிறம் துணிகரத்தையும், தீர்மானத்தையும் குறிக்கின்றன. இக்கண்காட்சி கடந்த 29 ஜனவரியில் முடிவுற்றது.

தமிழ் (Tamil language) Saturday, 06 March 2010 SingaporeDemocrats Print

LEAVE A COMMENT