சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தேசிய சுகாதார பராமரிப்பு திட்டம் : அணைத்து சிங்கப்பூரர்களுக்குமான ஒற்றுமொத்த பராமரிப்பு.

பிரச்சனை

தற்பொழுது வசதி குறைவுள்ளோர் தகுந்த சுகாதார பராமரிப்பு பெறுவதில்லை. காரணம் அவர்களால் அந்த செலவுகளை செலுத்த முடிவதில்லை. நடுத்தர சிங்கப்பூரியர்கள்கூட மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது ஏற்படும் செலவுகளை செலுத்த திண்டாடுகிரார்கள். தற்போதைய இலாப நோக்கம் கொண்ட முறை நோயாளிகளை வாடிக்கையாளாராக பார்க்கிரது.  நாம் நோய் வாய் பட்டால் சிகிச்சை பெற அஞ்சுகிரோம். மருத்துவச்செலவு நம்மை சீரழிய செய்கிரது. தற்போதைய இலாப நோக்கம் கொண்ட முறை நோயாளிகளை வாடிக்கையாளாராக பார்க்கிரது.

 

சிங்கப்பூர் ஜனநாயக கட்சியின் தீர்வு

சிங்கப்பூர் ஜனநாயக கட்சியின் சுகாதார பராமரிப்பு திட்டம் அணைவர்க்கும் பொதுவான கருணைமிகுந்த நியாமான திட்டம்.


3ஆ எனப்படும் மெடிசேவ், மெடிபண்ட் மற்றும் மெடிஷீல்டு என்ற மூன்று வௌ;வேறு திட்டங்களும்  நீக்கப்பட்டு ஒரே நிதியமைப்பாக மாற்றப்பட்டு சுகாதார செலவுகள் அணைத்தும் அதிலிருந்து செலுத்தப்படவேண்டும். இந்த கணக்கிற்கு அரசாங்கம் தன்பங்காக 84 விழுக்காடு செலுத்தவேண்டும்.  மக்களின் மெடிசேவ் கணக்கில் தற்போது உள்ள பணம் மக்களின் சேமநிதி சாதாரண கணக்கிற்கு திரும்ப கொடுக்கப்படும்.


சிங்கப்ப+ரியர்கள் அவர் அவர் வருமானத்தை பொருத்து ஆண்டுக்கு சராசரியாக சுமார் 400 வெள்ளிவரை தேசிய சுகாதார முதலீட்டு நிதிக்கு (தேசுமுநி) செலுத்தவேண்டும். தேசுமுநி-க்கு செலுத்தவேண்டிய தொகை மத்திய சேம நிதியிலிருந்து கழித்துக்கொள்ளப்படும். இது தற்பொழுது மெடிசேவ் கணக்கில் செலுத்தப்படும் தொகையைவிட மிகச்சிறிய தொகையே ஆகும். மாதம் 800 வெள்ளிவரை சம்பாதிப்போர், வேலையில் இல்லாதோர் மற்றும் சமூக நல உதவி பெறுவோர் இதற்கு பணம் செலுத்த வேண்டியதில்லை. மருத்துவமனையில் சேர்க்கப்படும் சிங்கப்ப+ர்ரர்கள் தங்கள் மருத்துவச்செலவில் 10 விழுக்காடு மட்டுமே செலுத்தவேண்டியிருக்கும். ஆண்டுக்கு அதிக பட்ச தொகையாக 2000 வெள்ளி மட்டுமே வசூலிக்கப்படும். அதாவது, ஒருவருக்கு மருத்துவச்செலவு 5000 வெள்ளியாக இருந்தால், அவர் 500 வெள்ளி செலுத்தினால் போதும்.  அதேபோல் ஒருவருக்கு மருத்துவச்செலவு 30000 வெள்ளியென்றால் அவர் அதிகப்பட்ச தொகையான 2000 வெள்ளி செலுத்தினால் போதும்.


சிங்கப்ப+ர்ரர் ஒருவர் குடும்ப நல மருந்துவகத்திற்கு சென்று சாதாரண பொது நோய்களான இருமல், சலி போன்றவைகளுக்காக சிகிச்சை பெற்றுக்கொண்டால், அந்த சிகிச்சைக்கு அரசாங்கம் முதல் 10 வெள்ளியையும் பாக்கி தொகையை நோயாளி கட்டும்படி செய்ய வேண்டும். அரசாங்கம் துணை கட்டணம் முன்கூட்டியே செலுத்தும்வழி அரசாங்க உதவித்தொகையை தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க முடியும்.


தேசுமுநி-க்கு பணம் செலுத்த இயலாத சிங்கப்பூரியர்கள் (குறைந்த வருமானம், வேலையில் இல்லாதோர் அல்லது சமூக நல உதவி பெறுவோர்) கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியித்தில்லை.
எல்லா பொது மருத்துவமனைகளும் தற்போதுள்ள நான்கு (யுஇடீ1இடீ2 மற்றும் ஊ) வகுப்பு படுக்கைகளுக்கு பதில் இனி இரண்டு வகுப்பு படுக்கைகள் மட்டுமே கொண்டிருக்கும். இதன்வழி, அவசர சிகிச்சை தேவைபடுவோருக்கு, அவர்களது நிதி நிலைமை பாராது, முதலில் சிகிச்சை வழங்கப்படும்.


சுகாதார பராமரிப்பு என்பது ஒவ்வொரு மனிதனுடைய அடிப்படை தேவையே தவிர அது ஒரு வியாபார பொருள் அல்லவே பணமுள்ளோர் உடனே வாங்கிக்கொள்வதற்கும் பணமில்லாதோர் மாதக்கணக்கில் அடிப்படை மருத்துவத்திற்க்காக காத்துக்கிடப்பதற்க்கும்.

சிஜக பரிந்துரைக்கும் இத்திட்டத்தின் நோக்கம் மிகுந்த நியாயமும் நிலைத்தன்மையும் கொண்டது.

சிஜக-வின் தேசிய சுகாதார திட்டத்தைப்பற்றி மேலும் வாசித்து தெரிந்துகொள்ள : அணைத்து சிங்கப்பூரர்களுக்குமான ஒற்றுமொத்த அக்கறை என்ற பக்கம்.

 

மேலும் தகவல் பெற:

  • சிஜக எளிதாக்கப்ட்ட சுகாதார நல திட்டம்.
  • மெடிசேவ் திட்டத்தை நீக்கிவிட்டு அரசாங்கத்தின் செலவை கூட்டு.
  • சுகாதார நலன் : மசெக திட்டத்தையும் சிஜக திட்டத்தையும் ஓர் ஒப்பிடு.

 

தமிழ் (Tamil language) Thursday, 20 August 2015 SingaporeDemocrats Print

LEAVE A COMMENT